சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017-2018 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் கட்சிகள் அதிக நிதிகள் பெற்று வந்தன. பாரத ஸ்டேட் வங்கியில் ஆயிரம் முதல் 1 கோடி ரூபாய் வரை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பெயரை குறிப்பிடாமல் நிதியை வழங்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த நவம்பரிலேயே முடிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி வழங்கப்பட்டது. அப்போது இது சட்டவிரோதமானது என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்புகளை வழங்கியது. யார்பணம் தருகிறார்கள் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது. 2023 நி்தியாண்டில் பாஜகவுக்கு மட்டும் 1,300கோடி ரூபாய் தேர்தல் கடன்பத்திர நிதி கிடைத்திருக்கிறது. 2022-23 காலகட்டத்தில் பாஜகவுக்கு வந்த தேர்தல் நிதி 2,120ரூபாயாக உள்ளது. . காங்கிரஸுக்கு வெறும் 171 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சிக்கு இந்த காலகட்டத்தில் 3.2 கோடி ரூபாய் நிதி கிடைத்திருகக்கிறது. வரும் 13 ஆம் தேதிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைக்கவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆணையிட்டுள்ளது.