டெலிவிஷனை வலுவாக்கும் ஜியோ..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே நிறுவனத்தின் பங்குகளில் 30 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வால்ட் டிஸ்னிநிறுவன பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ வாங்கும் பணிகள் நடந்து வருகிறது. தொலைக்காட்சி வணிகத்தை மேம்படுத்தும் வகையிலும்,ஓடிடி தளங்களில் ஆதிக்கம் செலுத்தவும்ஜியோ திட்டமிட்டுள்ளது. தற்போது வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் டாடா பிளேவில் 50.2 விழுக்காடு பங்குகள் உள்ளன. மீத பங்குகள் டெமாசெக் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருக்கிறது. இந்நிலையில் டெமாசெக் நிறுவனம் தனது 20 விழுக்காடு பங்குகளை விற்க முடிவெடுத்து இருப்பதாக கடந்த அக்டோபரில் தகவல் வெளியானது. இந்நிலையில் அதற்கு நிகராக டாடா பிளேவில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. ஜியோ சினிமா செயலி , நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்,அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்கள் வருகையால் டாடா பிளே நிறுவன இழப்பு 105 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 68.60 கோடி லாபத்தை அந்நிறுவனம் பெற்றது.