அட்டகாசமான ஏற்றம்…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 16 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. உலகளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக இந்திய சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,426 புள்ளிகளாக இருந்தது. ஒரே நாளில்376 புள்ளிகள் உயர்வை அந்த பங்குச்சந்தை பதிவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129புள்ளிகள் உயர்ந்து 22,040 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Wipro, M&M, SBI Life Insurance, Adani Port, Maruti Suzukiஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Power Grid Corporation, ONGC, SBI, Britannia Industries and Reliance Industries,ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. மருந்துத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் பதிவு செய்தன. MRPL, Aegis Logistics, Aster DM Health, BCL Industries, Canara Bank, Colgate Palmolive, Cummins India, Force Motors, Gujarat Pipavav, HPCL, Kalyan Jeweller, M&M, MRPL, NMDC, Oil India, Rategain Travel, Tips Industries, Torrent Power, TVS Motor, உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5760 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு1 ரூபாய் உயர்ந்து 77 ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 1000 ரூபாய் உயர்ந்து 77ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.