பேடிஎம்மில் விதிமீறல் இல்லையா?
வெளிநாட்டு பங்குச்சந்தை விதிமீறல்கள் ஏதும் பேடிஎம் பேமண்ட் வங்கியில் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விவரம் தெரிந்த அரசுத்துறை வட்டார அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. உரிய விதிகளை பின்பற்றாததால், பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 நிறுவனத்தில் கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ரிசர்வ் வங்கி, பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் வங்கியின் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. அதாவது பிப்ரவரி இறுதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட் வங்கி இயங்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இழப்பை பேடிஎம் நிறுவனம் இதனால் சந்தித்தது. கே ஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்கள் விவரங்களில் முறைகேடு நடந்ததாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த சூழலில் பேடிஎம் நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி தொடர்பாக விதிமீறல்கள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அமலாக்கத்துறை எந்த பதிலையும் அறிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே நேரத்தில் பேடிஎம் நிறுவனத்தின் வங்கி பார்ட்னராக ஆக்சிஸ் வங்கி செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அளித்துள்ள 15 நாட்கள் அவகாசம் என்பது பேடிஎம்மில் இருந்து மற்ற வங்கிகளுக்கு கணக்குகளை மாற்ற உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் நிறுவன பங்குகளில் 13-ல் 5 பேர் பங்கை விற்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஹோல்ட் என்ற நிலையிலேயே வைத்துக்கொள்ள சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் நிறுவனத்தின் பங்கு டார்கெட் விலை 31 விழுக்காடு கடந்தமாதத்தை விட 31விழுக்காடு குறைந்தது. 625 ரூபாய் குறைந்தது. தற்போது வரை 358 ரூபாய் 35 காசுகளுக்கு பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுகின்றன.