அணு சக்தி முதலீட்டை எதிர்நோக்கும் இந்தியா..
இந்தியாவில் அணு சக்தி ஆற்றல் துறையில் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றாத ஆற்றல் என்பதால் இந்த எரிசக்திக்கு மவுசு கூடியுள்ளதாம்.
வரலாற்றிலேயே முதன் முறையாக அணுசக்தியில் தனியார் முதலீடுகள் செய்யப்படுகின்றன. படிம எரிபொருள் இல்லாமல் 50 விழுக்காடு அளவுக்கு மின்சார உற்பத்தியை செய்யும் இந்தியாவின் திட்டத்துக்கு இந்த புதிய முதலீடுகள் உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த விகிதம் 42 விழுக்காடாக இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அதானி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் 440 பில்லியன் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக அணுசக்தி ஆற்றல் உற்பத்தி மற்றும் மத்திய அரசு அணுசக்தி கழகமும் சேர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அணுசக்திதுறை,NPCIL,டாடா பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ஆகிய நிறுவனங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. 2040 ஆம் ஆண்டுக்குள் 11,000 மெகாவாட் மின் உற்பத்தியை அணுசக்தியின் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. NPCIL என்ற அமைப்புதான் இந்தியாவில் அணுசக்தி மின்சார ஆலைகளை நிர்வகித்து வருகிறது. இதுவரை 7.5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும்,இதனை மேலும் 1300 மெகாவாட் உயர்த்தும் பணிகள் நடக்கின்றன. புதிய முதலீடுகளின்படி, அணு உலைகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவது, தண்ணீர் மற்றும் கட்டுமானங்களை தனியார் மேற்கொள்ளலாம்.வழக்கமாக போதுமான அளவுக்கு அணு எரிபொருளை இந்தியா பெறாமல் இருந்தது. இந்த சூழலில் 2010ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்கியது.2020-ல் 2,000மெ.வா அளவுக்கு உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது வரும் 2030ஆம் ஆண்டுவரை பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.