வாரன் பஃபெட் சொல்லும் அந்த ஒரு சூப்பர் யோசனை..
ஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இதே பாணியில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். நூறு வயதை நெருங்கி வரும் வாரன் பஃபெட் , பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு வாரன் கடந்த 24 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது நண்பர்களான சார்லி மங்கர் என்பவரை வாரன் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தில் அதிக முதலீடுகள் செய்துள்ள வாரன், அதே நேரம் கோக்க கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் சிறிய முதலீடுகள் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். 4 முதல் 5 விழுக்காடு அளவுக்கே முதலீடு செய்திருந்தாலும் அந்த பணம் அர்த்தமுள்ள முதலீடுகள் என்று வாரன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் 1850 முதல் இயங்கி வருகிறது.இதேபோல் கோக்க கோலா நிறுவனம் அட்லாண்டாவில் 1886 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பிரபலமாக இருப்பதை வாரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரண்டு பிரபல நிறுவனங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு, தவறாக வழிநடத்தப்பட்டு இருப்பதையும் வாரன் சுட்டிக்காட்டினார்.இருந்த போதிலும் வணிகம் சிறகடித்து பரப்பதையும் அவர் புகழ்ந்துள்ளார்.
இன்றைய தேதியில் மேலே சொன்ன இரண்டு பிஸ்னஸ்களும் உலகளவில் மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருப்பதையும் வாரன் குறிப்பிட்டுள்ளார். எப்போதோ போட்ட பணத்துக்கு தற்போது வருமானமும், டிவடண்ட்களும் வருவதையும் வாரன் புகழ்ந்துள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களும் சுமார் 16 விழுக்காடு வரை டிவிடண்ட்கள் தருவதாக குறிப்பிட்ட வாரன், கடந்த ஓராண்டில் எந்த தொகையையும் தொடாமல் இரு நிறுவனங்களும் தங்களுக்கு லாபத்தை தருவதாகவும் புகழ்ந்துள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களையும் தனித்தனியே புகழ்ந்த வாரன்,நிதானம் முக்கியமான அம்சம் என்றும்,ஒரே ஒரு வியாபார உத்தி பல சாதாரண முடிவுகளைவிட மேலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தனது நிறுவன பணியாளர்களுக்கு வாரன் பஃபெட் அறிவுரை வழங்கியிருக்கிறார்.