உச்சம் தொட்ட வாரனின் சேமிப்பு..
பங்குச்சந்தையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் வாரன் பஃபெட், இவரின் சேமிப்பில் உள்ள பணத்தின் மதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சமாக 167.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது., இவரின் சேமிப்பு என்பது எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட்வங்கி, எல்ஐசியின் சந்தை மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. எச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு என்பது 137 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதேபோல் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. எஸ்பிஐ வங்கியின் மதிப்பு 81 பில்லியன் டாலர்களாகவும்,எல் ஐசியின் சந்தை மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் வாரன் பஃபெட்டின் சேமிப்பை விட அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்களாக ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் ஆகியவை மட்டுமே உள்ளன. அதாவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலர்களாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 174 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. வாரன் பஃப்பெட்டின் சேமிப்பு என்பது சீன வங்கியின் மதிப்பை விடவும் அதிகம் அதாவது சீனாவின் பேங்க் ஆப் சீனா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 165 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதேபோல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் மதிப்பு 155 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், எச்எஸ்பிசி மற்றும் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தை விடவும் அதிக சேமிப்பை கேஷாகவே வாரன் வைத்துள்ளார். வாரனின் நிறுவனமான பெர்க்ஷைர் நிறுவனம், மிகப்பெரிய ரொக்கப்பணம் வைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலை வந்தபோதிலும் யாரையும் நம்பாமல் பெர்க்ஷைர் நிறுவனம் அழகாக நிலைமையை சீரமைத்தது குறிப்பிடத்தக்கது.