பங்குச்சந்தையில் அபார வளர்ச்சி,
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 27 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து 73,095 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76புள்ளிகள் உயர்ந்து 22,198 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Tata Motors, TCS, IndusInd Bank, Power Grid Corp,Sun Pharma ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Hero MotoCorp, Bajaj Finance, SBI, Divis Labs and UPL,ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை சரிந்தன. Action Construction Equipment, Dishman Carbogen, Godrej Properties, Havells India, ICICI Lombard, Intellect Design, Jubilant Industries, Kellton Technologies, NCC, Paisalo Digital, PB Fintech, Quick Heal Technologies, Railtel Corporation of India, Sobha, Sona BLW, Swan Energy, Tata Motors, Voltas உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5815 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 520 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு50 பைசா குறைந்து 75 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 500 ரூபாய் சரிந்து 75ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.