சந்தையில் 4 நாட்கள் ஆட்டம் ஓவர், அதிர வைத்த தங்கம்
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49 புள்ளிகள் உயர்ந்து 22,356புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Tata Motors, Bharti Airtel, Bajaj Auto, SBI, ONGCஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Bajaj Finserv, Bajaj Finance, Nestle India, Infosys,SBI Life Insuranceஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல் துறை பங்குகள் 1.3 விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6015 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 48ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 78 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்