தங்கத்தை சோதிக்க ஆர்டர்..
பொதுத்துறை வங்கிகள் கடன்களை வழங்குவதற்காக பெற்ற தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தின் மீதான கடனை மேலும் அதிகம் தர முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2022 ஜனவரி 1க்கு பிறகு செய்த கடன்களை மறுஆய்வு செய்யும்படி நிதியமைச்சகம் கோரியுள்ளது. தங்கத்தின் மீதான கடன்கள் பெறும் விகிதம் 17 விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி வரையுள்ள கணக்குப்படி 1 லட்சத்து ஆயிரத்து 934 கோடி ரூபாயாக தங்க நகைக்கடன் உள்ளது. ஆனால் அதற்கு பிறகு தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
IIFL நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. மார்ச் 4 ஆம் தேதிக்கு பிறகு புதிய நகைக்கடன்கள் வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவன கடன்களில் 32 விழுக்காடு தங்க நகைக்கடனாகவே இருக்கிறது.
அடிப்படையான தரவுகள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று நிதியமைச்சகம் கோரிக்கை சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. சரியான தரவுகள் இல்லாத நகைக்கடன்கள் குறித்த அறிக்கையை தரும்படியும், 31 நாட்களும், 90 நாட்களுக்கு இடையில் தங்க நகை கடன் கொடுத்த விவரங்களையும் நிதியமைச்சகம் கேட்டுள்ளது. தங்க நகைக்கடன்களில் மோசடி நடந்துள்ளதா என்பதை ஆராய இதுபோன்ற சுற்றறிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவுரைகளாக செய்துள்ளது.