சரிவில் முடிந்த சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 11 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து 73,502 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் குறைந்து 22,332 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் மார்ச் 12 ஆம்தேதி வெளியாக உள்ள சூழலில் முதலீட்டாளர்கள் உஷாராக பங்குகளை விற்று லாபத்தை பார்க்க முடிவெடுத்ததால் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் Apollo Hospitals, Nestle India, Cipla, SBI Life Insurance,Bajaj Finserv ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Tata Consumer Products, Power Grid Corporation, Tata Steel, Bajaj Autoஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல்துறை, எண்ணெய்,எரிவாயு, உலோகம்,ஊடகம் சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோகத்துறை, தகவல் தொழிநுட்பத்துறை ஆகிய துறை பங்குகள் சரிந்தன. ABB India, Blue Star, Cipla, Colgate Palmolive, Cummins India, GE T&D India, Glenmark Pharma, Godfrey Phillip, KEC International, Kirloskar Brothers, KPIL, Lupin, Oracle Financial Services, Siemens, Torrent Power, Trent, TTK Healthcare, Waaree Renewable, Zydus Life, உள்ளிட்ட 200 நிறுவன பங்குகள் உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையில் மாற்றமின்றி உச்சத்தில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6150 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 20 காசுகள் சரிந்து 79 ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 200ரூபாய் குறைந்து 79 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்