பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 22,335 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாக உள்ள சூழலில் முதலீட்டாளர்கள் உஷாராக பங்குகளை விற்று லாபத்தை பார்க்க முடிவெடுத்ததால் சந்தைகளில் இந்த நிலை காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் HDFC Bank, TCS, LTIMindtree, Maruti Suzuki,infosys ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Adani Enterprises, Cipla, Grasim Industries, Adani Ports , SBI ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தகவல் தொழிநுட்பத்துறை மட்டுமே உயர்ந்து முடிந்தன.ஆட்டோமொபைல்துறை, எண்ணெய்,எரிவாயு, உலோகம்,ஊடகம் சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோகத்துறை, ஆகிய துறை பங்குகள் சரிந்தன. TCS, Oracle Fin Serv, Interglobe Aviation, Quick Heal Technologies, eMudhra, Hercules Hoists, Cigniti Technologies, Gujarat Themis, Waaree Renewable, நிறுவன பங்குகள் உச்சம் தொட்டன.