குறிப்பிட்ட ஃபாஸ்ட்டேகை மாற்றவில்லையெனில் ஃபைன் கட்டணும்…
பேடிஎம் பேமண்ட் வங்கியில் வாங்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்கள் அதனை வரும் 15 ஆம் தேதிக்குள் வேறு நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பேடிஎம் பாஸ்ட்டேக் தான் பயன்படுத்துகிறீர்கள் எனில் சுங்கக் கட்டணத்தை இரட்டிப்பாக கட்டவேண்டிய சூழல் ஏற்படும். விதிமீறல்கள் புகார் காரணமாக பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் வங்கி வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு வேலை செய்யாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாஸ்ட்டேகிற்கு டாப் அப் கூட செய்ய இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த பழைய பாஸ்ட்டேகில் பணம் இருந்தால் அதில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.
பேடிஎம் பேமண்ட் வங்கி போல 32 நிறுவனங்கள் பேமண்ட் வங்கிகளை அளித்து அவற்றில் இருந்து பாஸ்ட் டேக் வாங்கிக்கொள்ளும்படி மத்திய அரசு நிறுவனமான IHMCL நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 7 கோடி பாஸ்ட் டேகில் பேடிஎம்மால் வழங்கப்பட்ட பாஸ்ட் டேகின் அளவு மட்டும் 30 விழுக்காடாக இருக்கிறது. மொத்தம் 2 கோடி அளவுக்கு பாஸ்ட் டேக்குகள் வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது