மின்சார கார்களை தயாரிக்கும் மாருதி சுசுக்கி..
இந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த பல அட்டகாசமான திட்டத்துடன் அதிக முதலீடுகளை செய்ய இருக்கிறது. கடந்த மார்ச் 19,2022-ல் பேட்டரி வாகனங்களை தயாரிக்க 10,400கோடி ரூபாயை சுசுக்கி மோட்டார் நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவித்தது. கடந்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி 2 டிரில்லியன் ஜப்பானிய என் பணத்தை முதலீடு செய்வதாக அறிவித்தது.
2023-31 வரையிலான கால கட்டத்தில் 28,000 கோடி ரூபாயை பேட்டரிகளுக்காக பயன்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஜப்பானில் மெல்ல மெல்ல பேட்டரி வாகனங்களுக்கு நகர்ந்து வரும் சுசுக்கி, இந்தியாவில் 2031 ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு வாகனங்களை பெட்ரோல் வாகனங்களாக வைக்கவே வரும்புகிறது.
பெட்ரோல் ரக வாகனங்களுக்கு பதிலாக ஹைப்ரிட் ரக வாகனங்கள் அந்நிறுவம் அறிவித்துள்ளது.
பிரத்யேகமாக கார் தயாரிப்புக்காகவே தனி பிரிவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுக்கி தனது நீண்ட நாள் எதிர்பார்ப்பான பேட்டரி வாகனம் வெளியிட இருக்கிறது. இந்த புதிய கார்களுக்கு Evx என்று பெயர் சூட்ட்பபடுகிறதாம். மாருதி ஈ-வி.எக்ஸ் ரக கார்கள் இந்தாண்டு டிசம்பரில் விற்பனைக்குக் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் மாருதி சுசுக்கி நிறுவனத்தன் புதிய அப்டேட்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.