தலைதூக்கிய சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 14ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 73,097 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 149 புள்ளிகள் உயர்ந்து 22,146 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Adani Enterprises, Adani Ports, Hero MotoCorp, Hindalco Industries,ONGC ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Axis Bank, IndusInd Bank, Bajaj Finance, Tata Steel,JSW Steelஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. வங்கித்துறையைத்தவிர்த்து அனைத்து துறை பங்குகளும் லாபத்தை பதிவு செய்தன. . ரியல் எஸ்டேட், ஊடகம், டெலிகாம், ஆற்றல் மற்றும் எண்ணெய்த்துறை பங்குகள் 3 விழுக்காடும், உலோகத்துறை, ஆட்டோமொபைல்,தகவல் தொழில்நுட்பத்துறை, சுகாதாரத்துறை பங்குகளும் 1 முதல் 2 விழுக்காடு வரை உயர்ந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. . ஒரு கிராம் தங்கம் 6135 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 1ரூபாய் 50காசுகள் உயர்ந்து 80 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 1500ரூபாய் உயர்ந்து 80 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்