பைஜூசுக்கு கடிவாளம் போட்ட கோர்ட்..
அமெரிக்காவில் உள்ள டெலவேர் மாகாண நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனம் 533 மில்லியன் டாலர் லோனை பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு அதிரடி காட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான வழங்கு விசாரணைக்கு வந்தபோது பைஜூஸ் நிறுவனத்தின் ரிஜூ ரவிந்திரன் மற்றும் கடன் வாங்கிய, வழங்கிய நிறுவனங்கள ஆஜராகினர்.
533 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கடனை பயன்படுத்தத் தடை விதித்தும் ஆணையிட்டுள்ளது.
மேலும் கேம்ஷாஃப்ட் காபிடல் நிறுவனத்தின் உரிமையாளரான வில்லியம் மார்டானை கைது செய்யவும் அந்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார். அவரை கைது செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கடனை வாங்க பைஜூஸ் திட்டமிட்டது. பைஜூ ரவீந்திரன், திவ்யா கோகுல்நாத் ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்த மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக பைஜூஸ் திகழ்ந்தது. அந்நிறுவனம் அமெரிக்காவில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. 2022-ல் ரிஜூ ரவீந்திரனின் நிர்வாகத்தின் கீழ் 533 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கடன்களை காம்ஷாப்ட் கேபிடல் நிறுவனத்துக்கு கடன் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2023ஆம் ஆண்டு இந்த தொகை இஸ்பிலர்ன் என்ற பைஜூசின் மற்றொரு அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் இந்த 533 மில்லியன் டாலர் பணம் எங்கே உள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. நீதிமன்ற ஆணையை மோர்ட்டான் பின்பற்றவில்லை என்றால் தினந்தோறும் 10,000 டாலர் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருப்பவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கடன் வழங்கியவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.