இந்தியாவில் வரி முறைகளும், செல்வ பரவலும்..
இந்தியாவில் சமூக மாறுதல்களை கட்டமைப்பதில் வரி செலுத்தும் முறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் மறைமுக வரி முக்கிய இடம் கொண்டிருக்கிறது. மொத்த வரி வருவாயில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மிகமுக்கிய பங்கு வகித்து வருகிறது. இதேபோல் நேரடி வரிகளான வருமான வரி மற்றும் கார்பரேட் வரிகளும் அடங்கும். குறைந்த வருமானம் உள்ளோரிடம் மறைமுக வரி என்பது குறைவான பங்களிப்பைத் தான் கொண்டுள்ளதை போல தோன்றும். ஆனால் அவர்கள்தான் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். அவர்கள் தலையில்தான் அதிக வரிச்சுமை விழுகிறது. இது ஏழையை இன்னும் ஏழையாகவும், பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக மாற்றுவதாகவும் உள்ளது. தேசத்தின் செல்வ செழிப்பை வெறும் 10 விழுக்காடு நபர்கள் கொண்டிருக்கும் நிலையில் ஏழை மக்கள் தலையில் மறைமுக வரி விழுந்துவிடுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஏழைகளாக இருக்கும் 50 விழிக்காடு மக்கள்தான் ஜிஎஸ்டிக்கு முழுமையாக ஆளாகின்றனர். 2021-22 காலகட்டத்தில் ஏழைகளின் பங்களிப்பில்தான் ஜிஎஸ்டி அதிகமாக இருக்கிறது. அதீத பணக்காரர்களிடம் இருக்கும் வரிச்சுமையை விட ஏழைகள்தான் அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர். சரியாக சொல்ல வேண்டுமெனில் 6 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் மட்டும்தான் இது போன்ற சிக்கல்கள் இருப்பதாகவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வேறு வகையான வரி முறை இருப்பதும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த நாடுகளில் தேசிய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி மட்டுமே முக்கிய வரி வருவாய் ஆதாரங்களாக உள்ளன. அந்நாட்டிலும் வசதி படைத்த 10 விழுக்காடு மக்கள் சுமார் 60 விழுக்காடு வரி செலுத்துகிறார்கள். வசதி குறைவாக உள்ளோர் வெறும் 10 விழுக்காடு அளவுக்கு மட்டுமே பிரிட்டனில் வரி செலுத்தும் நிலை உள்ளது. இது இந்தியாவை விட சமநிலையான போக்காக உள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் வருமான வரி அதிகம். ஜிௐஸ்டியை குறைக்க தேவையான திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வருவாய் சமநிலையை சீராக இந்த நாடுகள் கையாள்கின்றன. இந்தியாவில் தினக்கூலிகள் கூட ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகின்றனர். இது அவரின் நிதி சூழலை சமநிலையற்ற நிலையை உருவாக்கி வருகிறது. விலைவாசி உயர்வால் விழிபிதுங்கியுள்ள அவர்கள் ஒரு டீயும் பிஸ்கட்டும் கூட வாங்கிச்சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதற்கும் கூட ஜிஎஸ்டி போடப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். பிரட்டனில் பிஸ்கட்டுக்கு வரியே இல்லை என்பதை கவனிக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. அரிசி கோதுமைக்கு கூட 5 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்திய அரசின் முயற்சியால் மக்கள் கூடுதல் சிரமத்தை சந்திது வருகின்றனர்.
பெண்களின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சானிடரி நாப்கின்களுக்கு கடந்த 2018-ல் வரி இல்லாமல் செய்தது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் சானிடரி நேப்கினின் மூலப் பொருட்களுக்கு 18 மற்றும் 12 விழுக்காடு வரி போடுவதும் கவனிக்க வேண்டும். வரியில் இந்தியாவில் உள்ள பாரபட்சம் , அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருக்கும் வரியை போல சீராக்கினால்தான் சமநிலை கிடைக்கும். இப்படி செய்தால்தான் இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமமான சமூகத்தை உருவாக்க முடியும்