கூகுளின் உதவியை நாடும் ஆப்பிள் நிறுவனம்..
புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐஓஎஸ் 18 என்று இயங்குதளத்தில் அடுக்கடுக்கான புதிய ஜெனரேட்டிவ் ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அண்மையில் கூகுள் வெளியிட்ட ஜெமினி என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனமும் அஜாக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் வேறு ஒரு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தற்போது கூகுள் நிறுவனத்தின் உதவியை நாடி இருக்கிறது. இந்த புதிய வசதி வரும் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஆண்டு தோறும் டெவலப்பர்கள் மாநாடு ஒன்று அமெரிக்காவில் நடப்பது வழக்கம். இந்த மாநாட்டில் கூகுளுடன் ஆப்பிள் நிறுவனம் கைக்கோர்ப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய இணைப்பு ஆனது நடைபெற இருக்கிறது. மணி கணக்கில் உட்கார்ந்து கதைகளை எழுதுவதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு கட்டளை இடுவதன் மூலம் மிக எளிதாக அனைத்து தரவுகளையும் எழுத்து வடிவமாக மாற்ற முடியும் என்பதே இதன் சிறப்பாகும். இதனால் உலக அளவில் ஆப்பிள் பயன்படுத்தி வரும் இரண்டு பில்லியன் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.