5லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்…
மார்ச் 19ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது . இதற்கு முக்கிய காரணமாக ஜப்பானில் உள்ள மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான் 17 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவின் முக்கியமான மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன் அளவுகளை குறைப்பது தொடர்பாக முக்கிய கூட்டத்தை நாளை நடத்துகிறது . இது குறித்த எதிர்பார்ப்பும் இந்திய சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன் தின வர்த்தகமான 378 லட்சம் கோடி ரூபாயிலிருந்து முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு 373 லட்சம் கோடி ரூபாயில் சந்தை மூலதனம் வர்த்தக நேரம் முடிவில் இருந்தது. ஜப்பான் மத்திய வங்கியின் முடிவு ஆசிய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது . இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் நான்கரை விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. அதேநேரம் பஜாஜ் பின் சர்வ் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய இலாபத்தை பதிவு செய்தன. இந்திய பங்குச் சந்தைகள் சரிவுக்கு மிகப்பெரிய காரணங்கள் இதுவாக இருந்த போதிலும் , உலக அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையும் இந்த நிலைமையை மேலும் சிக்கலாகி உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்படுமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பதிவு செய்வதிலேயே குறியாக இருந்ததன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிந்தன.