2 மாதங்களில் இல்லாத சரிவு..
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது. கடனை திரும்ப செலுத்தும் முறையும் இந்த விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 0.15 விழுக்காடு குறைந்து 83 புள்ளி 15 ரூபாயாக இருக்கிறது. டாலர் வர்த்தகத்தின்போது இந்திய ரூபாயின் மதிப்பு 83.17 ரூபாயாக சரிந்தது. இந்தியாவிற்குள் டாலர் வரத்தை அதிகரிக்கும் ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் இந்தியாவில் டாலர் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. டாலர் குறியீடு 0.3 விழுக்காடு உயர்ந்து 104.14 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 3 வாரங்களில் இல்லாத உயர்வாகும்.
இதே காலகட்டத்தில் ஆசிய கரன்சிகளின் மதிப்பு கணிசமாக சரிந்துள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாது என்ற தகவலும், அந்த அமைப்பின் தலைவர் ஜெரோம் பாவெலின் பேட்டியையும் முதலீட்டாளர்கள் கவனமாக கண்காணிக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் 3 முறை சுமார் 25 புள்ளிகள் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை குறைக்க அமெரிக்க அரசும் மத்திய வங்கியான அமெரிக்க பெடரல் ரிசர்வும் முடிவெடுத்துள்ளன.