ஜேஎஸ்டபிள்யூவின் மாற்றுத்திட்டம்…
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல் இன்ஜின்களின் விலையிலேயே மின்சார கார்களை விற்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மோரிஸ் கராஜ் நிறுவனத்துடன் இணைந்து புதிய மின்சார கார்களை உற்பத்தி செய்ய ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கார்களை விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் விலையை நிர்ணயம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் ஸ்டீல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது., ஜேஎஸ்டபிள்யூ மற்றும் இன்னும் சில முதலீட்டாளர்கள் இணைந்து இந்த கூட்டு நிறுவனத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இந்த கூட்டு நிறுவனம் ஒடிசாவில் தனது உற்பத்தியை தொடங்க இருக்கிறது. 40 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஆலை அமைய இருக்கிறது. உள்ளூரிலேயே அனைத்து பொருட்களையும் பயன்படுத்தினால் விலை குறையும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த 18 அல்லது 24 மாதங்களில் உள்ளூரிலேயே பேட்டரி செல்களை தயாரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை புதுப்புது கார்களை உற்பத்தி செய்யவும் கூட்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. முதல் ஹைப்ரிட் கார் அடுத்தாண்டு சந்தைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.