தலைதூக்கிய சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590 புள்ளிகள் உயர்ந்து 72,692 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 175 புள்ளிகள் உயர்ந்து 22,014 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் BPCL, NTPC, Tata Steel, Power Grid Corp, Coal India ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Bharti Airtel, ICICI Bank, HDFC Life, Maruti Suzuki, Axis BanKஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள் துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Amanaya Venture, Avenue Supermarts, Bharti Airtel, CG Power, Cummins India, City Online, KEI Industries, Hitachi Energy உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் தங்கம் 6235 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு1 ரூபாய் 50காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 1500ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 500ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.