அமேசானில் பொருள் விலை உயரப்போகுது.. காரணம்இது..
முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமாக இந்தியாவில் அமேசான் நிறுவனம் வலம் வருகிறது. இந்த நிறுவனம் வரும் 7 ஆம் தேதியில் இருந்து செல்லர் ஃபீஸை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அமேசான் தளத்தில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு மின்னணு நிறுவனம் செல்லர் பீஸ் வசூப்பதில் இன்வண்டரிகளை பாதுகாப்பாக வைப்பது, தொழில்நுட்பம்,ஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்டவற்றிற்கும் சேர்த்துதான். செல்லர் பீஸ் உயர்ந்துள்ளது.இதன் கூடவே 18 விழுக்காடு ஜிஎஸ்டியும் சேரும் சூழலும் உள்ளது. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விலை 9-ல் இருந்து 13.5 விழுக்காடாக உயர இருக்கிறது. இதேபோல அழகு சாதன பொருட்களின் விலைகளும் செல்லர் ஃபீசும் 5-ல் இருந்து இரட்டிப்பாகி 10 விழுக்காடாக உயரப்போகிறது. இசை கருவிகள் ஏழரையில் இருந்து பத்தரை விழுக்காடாக உயர்கிறது. இன்வர்டர் மற்றும் பேட்டரிகளின் செல்லர் விலை ஒரு விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம், வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாகவும் இந்த விலைகள் உயர இருக்கின்றன. மாமாஅர்த் நிறுவனத்துக்கு அதிக கட்டணம்.. அழகு சாதன பொருட்கள் உற்பத்தியில் உள்ள மாமா அர்த், போட் மற்றும் சில நிறுவனங்கள் அதிக விலையை வசூலிக்க இருக்கிறது. தற்போது வரை 2.5 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடு வரை மாமா அர்த் நிறுவனம் செல்லர் பீஸ் வைத்துள்ளது. இது இனி 6 முதல் 9 விழுக்காடாக உயர இருக்கிறது. மாய்ஸ்சரைசர் கிரீம்கள் செல்லர் பீஸ் இரண்டரை முதல் 8 விழுக்காடாக இருந்தது. இனி இவை 6.5 முதல் 9.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அமேசான் பசார் என்ற புதிய வாடிக்கையாளர் சேவையையும் வர்த்தகத்தையும் அமேசான் செய்ய இருக்கிறது. மீஷோவில் கமிஷன் ஏதும் இல்லாத நிலையில் அமேசானில் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்கள்தான் அதிகம் ஈ-காமர்ஸ் பொருட்களை வாங்குவதும் தெரியவந்திருக்கிறது.