இந்தியாவின் கொள்கைகளால் சீனாவுக்கு லாபம்..
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்கள் காரணமாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யாமல் அவற்றை இறக்குமதி செய்வது கடினமான காரியமாகும். என்னதான் இந்த வகை வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் அவற்றின் பூர்விகம் எங்கிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், இந்தியாவின் ஓராண்டு ஆட்டோமொபைல் சார்ந்த பொருட்கள் இறக்குமதி என்பது 20.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதில் 30 விழுக்காடு சீனாவை நம்பியுள்ளது.
உலகளவில் பேட்டரி உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 75 விழுக்காடாக உள்ளது. ஒரு மின்சார வாகனம் வாங்குகிறோம் என்றால் அதில் 40 விழுக்காடு அளவுக்கு பேட்டரியின் விலையே இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் சாலையில் ஓடும் மின்சார வாகனங்களில் 3-ஆவது வாகனம் சீனாவை பூர்விகமாக கொண்ட நிறுவனங்கள் தயாரித்ததாக இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் புதிய கொள்கைகளால் சீனாவில் இருந்து பேட்டரிகள் வாங்கும் அளவு குறைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் புதிய வாகனங்களைத்தானே இறக்குமதி செய்யக்கூடாது.ஆனால் இந்தியாவில் இருக்கும் பிரபல நிறுவனங்களுடன் இணைந்து சீன நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக சீனாவின் சியாக் நிறுவனமும் இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் இணைந்து 5ஆயிரம் கோடி ரூபாயில் புதிய மின்சார வாகன ஆலையை அமைக்க இருக்கின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் அந்நிறுவனம் 1 கோடி கார்களை இந்தியாவில் விற்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 1992களில் 2 புள்ளியாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது வாகன உற்பத்தியில் 7புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. இது நல்லவிஷயம்தான் என்றாலும் சீனாவை அதிகம் நம்பியிருப்பது ஆபத்தானது என்றும் ஜிடிஆர்ஐ அமைப்பு எச்சரிக்கிறது. 500மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக உற்பத்தியை செய்யும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் ஆலையை தொடங்கினால் அதற்கு தற்போது விதிக்கப்படும் 70 முதல் 100 விழுக்காடு வரி 15 விழுக்காடாக குறையும் என்ற கொள்கையை இந்திய அரசு வகுத்தது. இதைத்தான் ஜிடிஆர் ஐ நிறுவனம் தற்போது எச்சரித்துள்ளது.