தலைதூக்கிய சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 27ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்ந்து 72,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் உயர்ந்து 22,123 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் Reliance Industries, Maruti Suzuki, Bajaj Auto, Bajaj Finance,Titan Company ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Hero MotoCorp, Tata Consumer Products, Apollo Hospitals, Dr Reddy’s Labs,Wiproஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோ மொபைல், ஆற்றல்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு உயர்ந்தன. உலோகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை பங்குகள் 0.3 முதல் 0.5 விழுக்காடு சரிவை கண்டன. ABB India, Arvind Smart, Bajaj Auto, Bharat Bijlee, CG Power, Cummins India, Dixon Technologies, Info Edge, Lakshmi Machine Works, Mankind Pharma, Maruti Suzuki, Oracle Financial Services, Rico Auto, Sanghvi Movers, Siemens, Star Cement, Thermax, Time Technoplast, Torrent Power, Voltamp Transformers உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6215 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு30காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 300ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்