டெபிட்கார்டு மெயின்டனன்ஸ் உயர்கிறது பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி வரும் 1 ஆம் தேதி முதல் புதிய உயர்த்தப்பட்ட பராமரிப்புக்கட்டணத்தை வசூலிக்க இருக்கிறது. குறிப்பிட்ட வகை டெபிட் கார்டு வைத்திருப்போருக்கு இந்த புதிய கட்டணம் அமலாக இருக்கிறது. வழக்கமான கிளாசிக் , சில்வர், கிளோபல், காண்டாக்லஸ் டெபிட் அட்டைகளுக்கு ஆண்டு பராமரிப்புக்கட்டணம் தற்போது 125 ரூபாயாக இருக்கிறது. இனி இது 200 ரூபாயாக உயர இருக்கிறது, இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டவேண்டும். இதேபோல் யுவா, கோல்ட், காம்போ டெபிட் அட்டைகளுக்கு தற்போதுள்ள 175 ரூபாய் கட்டணம் வரும் 1 ஆம் தேதி முதல் 250 ரூபாயாக உயர இருக்கிறது.இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்க வேண்டும்.
இதேபோல் பிளாட்டினம் டெபிட் கார்டுகளுக்கு தற்போது 250 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டியாக இருப்பது வரும் 1 ஆம் தேதி முதல் 325பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட இருக்கிறது. இவை தவிர்த்து பிரைடு பிரீமியம் பிஸ்னஸ் கார்டு வைத்திருப்போருக்கு தற்போது வரை 350 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது வரும் திங்கட்கிழமை முதல் 425 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டியாக உயர இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஜிஎஸ்டி என்பது 18 விழுக்காடாகும். டெபிட் கார்டு வழங்கும் கட்டணம்,புதிய கார்டு வழங்குவது ஆகியவற்றிற்கு கட்டணும் மாற்றப்பட்டுள்ளது. கிரிடிட் கார்டுகளிலும் அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை வித்துள்ளது. அதன்படி வீட்டு வாடகைக்கு புள்ளிகள் வழங்குவது வரும் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளன. இதேபோல் ஆக்சிஸ் வங்கியும் டெபிட் கார்டில் சில கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது. புக்மை ஷோ உள்ளிட்ட சலுகைகளும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.