டீசலில் இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுத்தம்..
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ நிறுவனம் தனது கடைசி டீசல் இன்ஜின் வாகனத்தை உற்பத்தி செய்து முடித்துவிட்டது. குறிப்பிட்ட இந்நிறுவனத்தில் xC90 என்ற வகை காரின் கடைசி கார் அருங்காட்யகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் 2030 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட நிறுவனம் அனைத்து வகை கார்களையும் மின்சார கார்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. மற்ற சொகுசு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் வழக்கமான அலுவல் கூட்டமாக கருதாமல் ஒவ்வொரு வாடிக்கையாளரும் முக்கியமாக கருதி, பேட்டரி வகை வாகனக்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்தாண்டே ஆடியில் மின்சார கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டே படிம எரிபொருளுக்கு மாற்றாக வால்வோ கார்கள் புதுமைகளை புகுத்தி வழக்கமான கார்களின் உற்பத்தியை நிறுத்தியது.
மாற்றாக ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களையும் இந்நிறுவனம் ஐரோப்பியாவில் உற்பத்தி செய்து வருகிறது.
வால்வோ ரக கார்களை மக்கள் வாங்கும் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. கோதன்பர்க் பகுதியில் உள்ள வால்வோ நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்கு இந்த கடைசி டீசல் வாகனம் அனுப்பி வைக்கபட இருக்கிறது.
இதற்கு போட்டியாக மின்சார வாகனமாக eX90 என்ற மின்சார காரையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஏற்கனவே டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பழுதுநீக்குதல் மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்க போதுமான ஏற்பாடுகளை வால்வோ நிறுவனம் செய்ய இருக்கிறது. பசுமை மாற்றத்தை நோக்கி செல்வதாகவும் வால்வோ நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது