உற்பத்தியை பாதித்த கட்டுப்பாடுகள்..
இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்இந்தியாவில் புத்துயிர் பெறவேண்டியிருக்கிறது. இந்நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் முதலில் மாற்றங்கள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆலைகள் அமைக்க நிலம்தான் பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது. சரியான வகையில் நிலத்தை பயன்படுத்தினால் உற்பத்தி மேம்படும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும், தெலங்கானாவிலும் விதிகள் சரியாக பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக நிலத்தடி நீர் சேமிப்புகளை தொழிற்சாலை நிறுவனங்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் ஹாங்காங்கில் ஒரு துளி இடம் கூட வீணடிக்கப்படுவதில்லை. பிலிப்பைன்சில் 30 விழுக்காடு அளவுக்கு வீணடிக்கப்படுகிறது. நவீன உபகரணங்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம் இந்தியாவில், குறிப்பாக தீத்தடுப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
அரசு விதித்துள்ள பார்க்கிங் உள்ளிட்ட அம்சங்கள் முறையாக கையாளப்படாததால் நிலங்கள் வீணாகின்றன. இந்தியாவில் பார்கிங் வசதிக்காகவே பல நிறுவனங்கள் இடத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்ற புகார் உள்ளது. முறையான தளங்கள் சரியாக கட்டமைக்கப்படவில்லை என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. பிளாட்டின் அளவை விட 1.3 மடங்கு அதிகம் உள்ள இடங்களில் குறிப்பாக அலுவலக கட்டடம் மும்பையில் 5ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. ஜப்பானில் 13,000 சதுர மீட்டர், மற்றும் ஹாங்காங்கில் 15000 சதுர மீட்டர் அளவில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. எனவே கட்டட விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் எப்படி நிலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப மாநிலங்களிலும் விதிகள் மாற்றப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.