உரிமையை மாற்றும் அதானி நிறுவனம்..
உணவுத்துறையில் மிகமுக்கிய நிறுவனமாக வலம் வரும் அதானி கமாடிட்டிஸ் நிறுவனம் விரைவில் அதன் உரிமையை பங்குதாரர்களின் பெயர்களுக்கே மாற்ற முடிவெடுத்துள்ளது. இதனால் என்ன ஆகும் என தெரிந்துகொள்ளலாம் வாங்க.. அதானி என்டர்பிரைசர்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் கீழ் உணவுத்துறையில் இயங்கும் அதானி கமாடிட்டீஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையை அதானி வில்மர் நிறுவனத்துக்கு மாற்ற இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டுடன் அதானி வில்மர் நிறுவனத்தில் அதானி கமாடிட்டிஸ் நிறுவனத்தின் பங்குகள் 43.94 விழுக்காடாக இருந்தன. தற்போது பிரிக்கப்பட்ட பிறகு, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு அதானி வில்மரின் பங்குகளும் கிடைக்க இருக்கிறது. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் இனி கூட்டு நிறுவனமாக செயல்படாது. அதானி வில்மரின் கீழ்தான் இயங்க இருக்கிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 500 பங்குகளை வைத்திருந்த நபர்களுக்கு, தற்போது அதானி வில்மரின் 251 பங்குகள் கூடுதலாக கிடைக்க இருக்கிறது. அதானி வில்மர் என்பது விவசாயம் சார்ந்து 1999 ஆம் ஆண்டு அதானி மற்றும் வில்மர் குழுமத்தால் தொடங்கப்பட்டது. உணவுத்துறை சார்ந்த சந்தையில் அதிகம் விற்பனையாகும் பொருட்களை குறிவைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுவதாக அதானி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெரிய நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு 76 %-ல் இருந்து 87.87%ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோல் பொதுமக்கள் பங்குகள் வைத்திருக்கும் அளவு 12.13%-ல் இருந்து 23.24%ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 1455 கோடி ரூபாயாக உள்ளது. இதே அளவு என்பது கடந்தாண்டில் 674 கோடியாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 11 விழுக்காடு ஏற்றும் கண்டுள்ளன. கடைசி வர்த்தக நேர முடிவில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.8 % உயர்ந்து 3,225 ரூபாயாக விற்கப்பட்டது.