ஓலா எலெக்ட்ரிக் ஐ.பி.ஓ அப்டேட்..
இந்தியாவில் முன்னணி மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு அத்தனை பெரிய வரவேற்பு இல்லாமல் போயிருக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்த பங்கு வெளியிடப்பட்டது. முதல் நாளில் வெறும் 35 விழுக்காடு பங்குகள் மட்டுமே விற்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் பங்குகள் 72 ரூபாய் முதல் 76 ரூபாயாக விற்கப்பட்டது. 195 பங்குகள் கொண்ட ஒரு செட்டாகத்தான் அந்த நிறுவனம் விற்பனையை செய்து வருகிறது.
ஆரம்ப பங்கு வெளியீடு மூலமாக 6145.56 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் ஈக்விட்டி பங்குகளை விற்று 5,500 கோடி ரூபாயும் நிதியாக திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. ஈக்விட்டி ரக பங்குகள் மட்டும் 72%விற்கப்பட்டுள்ளன. இந்த பங்கு விற்பனை இன்றுசெவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் நிறுவனங்களைச் சேராத முதலீட்டாளர்கள் செய்த முதலீடுகள் மட்டும் 81 விழுக்காடாக உள்ளது. 8.38 வி ழுக்காடு பங்குகள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிரதானமாக பேட்டரி வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஆக்சிஸ் கேபிடல், கோடக் மகிந்திரா கேபிடல் நிறுவனமும், எஸ்பிஐ கேபிடல் மார்கெட்ஸ் நிறுவனமும் பணியாற்றி வருகின்றன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் வரும் 9 ஆம் தேதி தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் விற்பனை செய்ய இருக்கின்றன.