கடன் பரிவர்த்தனை மாதந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்..
தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அமைப்பின் தலைவர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யுபிஐ முறையின்படி மாதந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வாங்கப்படுவதாக அதிர வைத்திருக்கிறார். மாதந்தோறும் 10 ஆயிரம் கோடியில் 100 முதல் 200 கோடி ரூபாய் அளவுக்கு கிரிடிட் லைன் என்ற வகையில் யுபிஐயில் வந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுபிஐயில் கடன் தருவதில் ஐசிஐசிஐ நிறுவனம் முன்னணியில் உள்ளது.
மற்ற 5 நிறுவனங்களும் பெரிய நிறுவனங்கள்தான் என்றும் தெரிவித்தார். கடந்தாண்டு அறிமுகமான கிரிடிட் லைன் ஆன் யூபிஐ என்ற வசதி, சிறு கடன்களை டிஜிட்டலில் வழங்குகின்றன. அனைத்து முன்னணி தனியார் வங்கிகள் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் இந்த வகை கடன்களை வழங்கி வருகின்றன. தற்போது வரை 16 வங்கிகள் இந்த வசதியை தருகின்றன. கடன்தரும் போக்கையே யுபிஐ மூலம் கடன்தரும் வசதி மாற்றிவிட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாவி என்ற நிறுவனத்தின் தலைவர் சச்சின் பன்சாலும் இதையேதான் தெரிவித்துள்ளார். வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ள உலகளாவிய கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சரவையின் தகவல் தொழில்நுட்பத்துறை, வெளியுறவுத்துறை, நிதிசேவைகள், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகிழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது.