யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு..
யுபிஐ முறையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த வகை பரிவர்த்தனை வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. யுபிஐ முறைப்படி பணத்தை கையாள்வதால் வரி செலுத்துவதும் உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிதி கொள்கை கூட்டத்தில் இது தொடர்பாகவும் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் முறைப்படி கடன் தரும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. 1லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதால் தேவையில்லாத பணம் செலுத்தும் செயலிகளுக்கு வேலை ஏற்படாது என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. கடன் தரும் தகவல்களை சிஐசி அமைப்பிடும் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. டிஜிட்டல் மூலம் கடன் பெற்றால் அந்த தரவுகளையும், லோன் அளிக்கப்பட்டது குறுத்தும் மக்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.