சரிவை குறிக்கிறதா வாரனின் நடவடிக்கை?
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார். இதேபோல் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும் 12 நாட்களில் முதலீடுகளை பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் குறைத்துள்ளது. உலகளவில் ஆகஸ்ட் மாதத்தில் பங்குச்சந்தைகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்த நிலையில் வாரன் பஃப்பெட்டின் முதலீடு குறைப்பு பெரிய வீழ்ச்சியின் முன் கணிப்பா என்று மக்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 16 ஆம் தேதி இதுவரை இல்லாத உச்சம் தொட்டிருந்தது. பெரிய எதிர்பார்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவன பங்குகளை வாரன் பஃப்பெட் பாதியாக குறைத்தால் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதமும் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் முதலீட்டை பெர்க்ஷைர் நிறுவனம் குறைத்தது. பங்குகளின் அளவை பெர்க்ஷைர் நிறுவனம் குறைத்தாலும் தற்போதும் அந்நிறுவனத்தின் விருப்பமான பங்குகளாக ஆப்பிள் நிறுவன பங்குகள் இருக்கின்றன. கடந்த 2021-ல் 908 மில்லியன் ஆப்பிள் பங்குகள் மீது 31.1 பில்லியன் அமெரிக்க டாலரக்கள் முதலீடு செய்துள்ள அந்நிறுவனம், 2024 ஜூன் மாதத்தில், 400 மில்லியன் பங்குகளாக குறைந்துள்ளது. ஆப்பிளைப்போலவே பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகளின் மீது முதலீடுகளை வாரனின் நிறுவனம் 8.8 விழுக்காடாக குறைத்துள்ளது பெரிய அளவில் பங்குகளை விற்றுள்ளதால் வாரனின் நிறுவனத்துக்கு 11.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. இதுவே கடந்தாண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும்தான் கிடைத்தது. 345 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை வாரனின் நிறுவனமே திரும்ப வாங்க முடிவெடுத்துள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்புத் தகவல்கள் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வாரனின் முதலீட்டு நடவடிக்கை பெரிய ஆபத்து வர இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாரன் எப்போது முதலீடு செய்கிறாரோ அப்போதே தாங்களும் முதலீடு செய்ய பெரிய ரசிகர்கள் பட்டாளமே காத்திருக்கிறது.
ஆப்பிள் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளை திரும்பப்பெற்ற வாரன், 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பங்குகளை விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பங்குச்சந்தைகளில் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று வரும் நிலையில், வாரனின் நடவடிக்கையை மக்கள் அதிகளவில் உற்று நோக்குகின்றனர்.