இளைஞர்களை அழைக்கிறது செபி..
இந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை செபியின் இயக்குநர்கள் குழுவுக்கு உதவியாக இளைஞர்கள் பணியாற்றலாம்.. பங்குச்சந்தைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர்கள் உதவியாக இருப்பார்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் 50 இளைஞர்கள் மும்பையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும். முதலில் ஓராண்டுக்கு இவர்கள் பணியில் இருப்பார்கள் பின்னர் தேவைப்பட்டால் 2 ஆண்டுகள் பணி நீட்டிக்கப்படும். ரகசியம் இல்லாத சாதாரண தகவல்களில்தான் இந்த இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தொழில்நுட்பப் பணியாளர்களை ஆக்கப்பூர்வமாக பணியாற்ற செபி வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. முதுநிலை மேலாண்மை படிப்பு முடித்த இளைஞர்கள், பட்டய கணக்கர்கள், நிறுவன செயலாளர்கள், உள்ளிட்டோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஐபிஓ சார்ந்த நிதி திரட்சி மற்றும் அது சார்ந்த பணிகள் இருக்கும்பரஸ்பர நிதி கண்காணிப்பு, கார்பரேட் நிர்வாக விஷயங்கள் குறித்து ஆராயும் வகையில் பணிகள் இடம்பெறும்ஈக்விட்டியில் முதலீடு, ETF , பரஸ்பர நிதி ஆகியவற்றை கையாள இவர்களுக்கு அனுமதி இருக்காது.