சோலார் துறையில் கால்பதிக்கும் அம்பானி..
இந்தியாவில் சந்தை மதிப்பில் அதிக தொகை கொண்ட ஒரு நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது. இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில், இந்தியாவின் முதல் ஜிகா பேக்டரியை தொடங்க இருக்கிறது. அதுவும் சூரிய ஆற்றலில் இருந்து பேட்டரிக்கு ஆற்றல் ஊட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் நெட் ஜீரோ என்ற கரியமில வாயு வெளியேற்றமில்லா நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஜிகாவாட் உற்பத்தி அளவுள்ள பேட்டரி 2026-ல் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாலிசிலிக்கான், கண்ணாடி, வேபர்ஸ், இன்காட்கள், செல்கள், பி.வி மாடல்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஆலை உருவாக இருக்கிறது. 2026ஆம் ஆண்டுக்குள் 50 மெகாவாட் ஹவர்ஸ் அளவுள்ள லித்தியம் பேட்டரி செல்களையும் அந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சோடியம் அயன் செல்களை அடுத்தாண்டு தயாரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 100 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 2030-க்குள் தயாரிக்க 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தார் அம்பானி, அதன்படியே ஜாம்நகர், குஜராத்தில் ஹைட்ரஜன், பேட்டரி சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்டவற்றிக்காக ஆலை தயாராகி வருகிறது.