ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ..
ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அண்மையில் தனது இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மனை வேலையை விட்டு தூக்கியது. அவருக்கு பதிலாக பிரையன் நிக்கால் புதிய தலைமை செயல் அதிகாரியாக இயங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லக்ஷ்மன் பதவியேற்றார். கடந்த மாதம் வேலை -குடும்ப வாழ்க்கை இடையேயான சமநிலை குறித்து ஃபார்டியூன் என்ற பத்திரிகைக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் மாலை 6 மணிக்கு மேல் தாம் வேலை செய்வதில்லை என்று கூறியிருந்தார். அதன்பிறகு வேலை நிமித்தமாக யாராவது தம்மை அழைத்தால் அது அதிமுக்கியத்துவமாக இருந்தால் மட்டுமே அந்த பணிகளை செய்வேன் என்றும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், அவரை பணியில் இருந்து நீக்கவும் கோரியிருந்தனர். இந்த நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். எனினும் அவரின் பணிக்காலத்தில் லக்ஷ்மன் சிறப்பாக செயல்பட்டதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. அமெரிக்க காப்பி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், விற்பனை சரிந்து வந்த நிலையில் தலைமை பதவியில் இருந்தவர் நீக்கப்பட்டு புதிய நபர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சீனாவில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.