மீண்டு எழுந்த சந்தைகள்..
ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,330 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 436 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி397 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 541 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. விப்ரோ, கிராசிம், டெக் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Divis Labs உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. கோல்கேட், epl, ERIS,jb CHEMICAL உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்தது. வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 105 ரூபாய் விலை குறைந்து 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 840 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 91 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்து 91ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.