சவுத் இந்தியன் வங்கி டிவிடண்ட்..
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி தனது முதலீட்டாளர்களுக்கு 30 விழுக்காடு டிவிடண்ட் அளிக்க உள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இது அந்த வங்கி வழங்கும் 2023-24 நிதியாண்டின் கடைசி டிவிடண்ட்டாகும்அந்த வங்கியின் முகப்பு மதிப்பு 1 ரூபாய், அதற்கான டிவிடண்ட்டாக 30 பைசா அளிக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 20 ஆம் தேதியை அந்நிறுவனம் ரெக்கார்ட் தேதியாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி சவுத் இந்தியன் வங்கியின் பங்குகளை வாங்கியிருந்தால் கூட அவர்கள் டிவிடண்டுக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குகள் பரிமாற்றமானது வரும் புதன்கிழமை தொடங்கி, அடுத்த வாரம் 27ஆம் தேதிக்குள் முடிக்கப்படவேண்டும். வரும் 27 ஆம் தேதி அந்நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இதற்கான ஒப்புதல் கிடைத்த உடன் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்தாண்டும் இந்நிறுவனம் 30 பைசா டிவிடண்ட் அளித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு 0.25 ரூபாயும், 2017,2018 ஆகிய காலகட்டத்தில் 0.40 ரூபாயும் டிவிடண்ட்டாக வழங்கிய வரலாறும் உள்ளது.