விசாரணையில் களமிறங்கிய செபி
நடப்பாண்டில் மட்டும் 342 புகார்களை செபி அமைப்பு தொடங்கியுள்ளது. இது செபி வரலாற்றிலேயே மிகவும் அதிகமாகும். இதற்கு முன்பாக கடந்த 2017-ல் 245 புகார்களை செபி விசாரித்துள்ளது. அப்போது தலைவராக யு.கே. சின்ஹா இருந்தார். சில்லறை வர்த்தக அதிகரிப்பும் முறைகேடுகளுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. முறைகேடுகள் புகார்களை தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் நுனுக்கமான முறையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செபி தெரிவித்துள்ளது. பெரும்பாலான முறைகேடு புகார்கள் உள் வணிகம்சம்பந்தமாகவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விசாரணை சார்ந்த பணிகளில் தற்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர். முறைகேடுகளை விசாரிப்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை கெட்டுவிடக்கூடாது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் அதன் முடிவுகள் மந்த கதியில்தான் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 150 வழக்குகளை மட்டுமே செபி விசாரித்து முடிக்கிறது. மதாபி பதவியேற்ற பிறகு இதுவரை 545 வழக்குகளை செபி விசாரித்துள்ளது. அஜய் தியாகி தலைவராக இருந்த காலகட்டத்தில் மொத்தமே 566 வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்பட்டன. அமெரிக்க பங்கு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி புரிபுச் மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. கடந்த 2022-ல் தலைவராக மதாபி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 1995-96 முதல் 2002 வரை தலைவராக இருந்த மேத்தாவின் 7 ஆண்டு கால தலைமையில் மொத்தமே 525 வழக்குகள் மற்றும் புகார்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன என்கிறது புள்ளிவிவரம்