மஸ்குக்கு ஐடியா தருகிறாரா ஓலா சிஇஓ….?
பிரபல தொழிலதிபரும், எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் , தொழில்கள் செய்வதை நிறுத்தலாம் என்று ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். தனியார் பத்திரிகை சார்பில் பிடி 100 என்ற நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பவிஷிடம் மஸ்க் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பவிஷ், மஸ்கை விட தாம் வயதில் குறைவானவர் என்றும், மாற்றத்துக்காக மஸ்க் வேறு ஏதையாவது செய்யலாம் என்றும், தாம் செய்யும் தொழிலை மஸ்கும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்திய உடைகளே தனது தேர்வு என்று கூறிய பவிஷ், மேற்கத்திய நாடுகளுக்கான தயாரிப்பாக டெஸ்லா இருப்பதாகவும், மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஓலா நிறுவனம்தான் என்றார். இந்தியாவுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய வாய்ப்பு உள்ளதாகவும். அதைத்தான் ஓலா எலெக்ட்ரிக் செய்து வருவதாகவும், கூறியுள்ளார். ஓலா நிறுவனத்தின் குருடிரிம் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடங்கி 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்த நிறுவனத்தின் இலக்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தர வேண்டும் என்றும், இது இந்தியாவுக்கு நீண்டகாலத்துக்கு தரவேண்டும் என்றும் பவிஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே வடிவமைக்கும் நேரம் இது என்றும் பவிஷ் கூறியுள்ளார்.