ஏமாற்றுகின்றனவா சிம்கார்டு நிறுவனங்கள்?
இந்தியாவில் 80 கோடி பேர் அரசின் உதவிகளை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 60 கோடி பேர் நடுத்தர குடும்பத்தினர்தான்.
டிவி, இருசக்கர வாகனம், வாஷிங் மிஷின், மொபைல்போன் இவர்களின் அடிப்படை தேவையாக உள்ளது. இந்தியர்கள் வருவாய்க்கு தகுந்தபடி ஆட்டோமொபைல், ஸ்டீல், அலுமீனியம் , உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். இந்நிலையில் செல்போன் நிறுவனங்கள் குறைவாக அளிக்கும் சேவைக்கு அதிக தொகை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
டெலிகாம் நிறுவனங்களுக்கு 100 ரூபாய் வருவானம் வருகிறது என்று வைத்துக்கொண்டால், அதில் 80 விழுக்காடு வருவாய், 20%மக்களிடம் இருந்து மட்டுமே வருகின்றது. அண்மையில் கூட தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், சிம்கார்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில், சேவை குறைவாக உள்ளதாகவும், சிம்கார்டு நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் அரைகுறையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அண்மையில்தான் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளன. எனினும் நிறுவனங்கள் முழுமையான சேவையை அளிக்காமல் குறைகள் உள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தரமான சேவையை அளிக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.