பங்குச் சந்தைகளில் லேசான உயர்வு
ஆகஸ்ட் 22 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 053 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து770 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Grasim Industries, Tata Consumer Products, Tata Steel, Bharti Airtel, Apollo Hospitals உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Tata Motors, Dr Reddy’s Labs, NTPC, Wipro, M&M உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. ஆற்றல் துறை பங்குகள் 1 விழுக்காடு வரை குறைந்தன. மருந்து,எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் விலை லேசான அளவில் குறைந்து முடிந்தன. வங்கி, ரியல் எஸ்டேட், டெலிகாம் நிறுவன பங்குகள் 0.5 முதல் 1 % விலை உயர்ந்து முடிந்தன. Abbott India, Alembic, Ashok Leyland, Bhansali Engineering, Colgate Palmolive, Coromandel International, Fino Payments, Gillette India, Gufic Bio, Inox Green, Jubilant Foodworks, M&M Financial, Morepen Lab, Mphasis, Persistent Systems, Rane Madras, Sutlej Textiles, Transport Corporation, TVS Electronics, TVS Motor உள்ளிட்ட 330க்கும் அதிகமான நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்ச விலையை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது. வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் விலை குறைந்து 6 ஆயிரத்து 680 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 92 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 92ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.