வீட்டில் இருந்து வேல: எதிர்க்கும் ஜாம்பவான்கள்..
வீட்டில் இருந்து வேலை செய்வதால்தான் உற்பத்தி திறன் குறைவதாக பல துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளர் மார்க் சக்கர்பர்க், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அலுவலகம் வந்து பணியாளர்கள் வேலை செய்வதைத்தான் விரும்புகின்றனர். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எரிக் ஸ்கிமிட், வேலை-சொந்த வாழ்க்கை பற்றி அண்மையில பேசியிருந்ததும் முரணாக உள்ளது. அப்படி வீட்டில் இருந்து வேலை பார்க்க எதிர்ப்பு தெரிவித்த 5 பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி- கடந்தாண்டு புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி, வீட்டில் இருந்து வேலை செய்வதை சோம்பேரித்தனம் என்று விமர்சித்தார். ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன்- இவரும் வீட்டில் இருந்து பணியாற்றுவதை மிக மோசமான மிஸ்டேக் என கூறியுள்ளார். மார்க் சக்கர்பர்க்-வீட்டில் இருந்து வேலை செய்வோர் செயல்திறன்கு றைந்தவர்கள், அலுவலகத்துக்கு வந்து வேலை செய்பவர்கள்தான் வேலையை கச்சிதமாக முடிக்கின்றனர். எலான் மஸ்க்- மன ரீதியாகவே வீட்டில் இருந்து வேலை செய்வது தவறு என குறிப்பிட்டுள்ளார். சேல்ஸ்போர்ஸ் சிஇஓ மார்க் பெனியாஃப்- நான் வீட்டில் இருந்துதான் வேலை செய்வேன் ஆனால் எனது குழுவை நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த மாட்டேன். பாதி நாள் ஆபிஸ் மீதி நேரம் வீட்டில் இருந்தும் வேலை செய்யட்டும்.