சந்தைகளில் பெரிய ஏற்றமில்லை..
ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெறும் 33புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 086 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வெறும் 11 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து823 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Bajaj Auto, Coal India, Tata Motors, Sun Pharma,Bharti Airtel உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Wipro, ONGC, Divis Labs, LTIMindtree,Infosysஉள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல் துறை பங்குகள் மட்டும் 1 விழுக்காடு உயர்ந்தன. உலோகம், ரியல் எஸ்டேட், ஊடகம், பொதுத்துறை வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அரை முதல் இரண்டரை விழுக்காடு வரை விலை சரிந்து முடிந்தன. HUL, Sun Pharma, Balu Forge Industries, SMS Pharma, Minda Corporation, Elin Electronic, Uflex, PCBL, Power Mech, DOMS Industries, Himadri Speciality Chemical, Jindal PolyFilm, TVS Motor, Gillette India, Aurobindo Pharma, Glenmark Pharma, Voltas, Ashok Leyland, Colgate உள்ளிட்ட 320க்கும் அதிகமான நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்ச விலையை தொட்டன. ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது. வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 6 ஆயிரத்து 660 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 91 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 300ரூபாய் குறைந்து 91ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.