FSSAIயின் அதிரடி உத்தரவு..
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த வியாழக்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உணவுத்துறை சார்ந்த வணிகம் செய்வோரும், ஆன்லைன் வணிக நிறுவனங்களும் பால் சார்ந்த பொருட்களை கையாளும் அனைத்து A1,A2 ரக கிளைம்களையும் நீக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதாவது பால் சார்ந்த பொருட்களான நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்டவற்றை A1,A2 உள்ளிட்ட உரிம எண்களை பெற்றுவிட்டு சில நிறுவனங்கள் விற்பனை செய்வதாகவும், இது பற்றி புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதால் நடவடிக்கை எடுப்பதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள விதியில் பீடா கேசின் அளவை வைத்து a1,a2 என பிரிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட பொருட்களை உடனே திரும்பப்பெற முடியாது என்பதால் அதற்கு 6 மாத அவகாசத்தையும் மத்திய அரசு நிறுவனம் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இவ்வாறு செய்வதால் பால் பொருட்கள் தயாரிப்பு லேபிலிங்கில் வெளிப்படைத்தன்மையும், துல்லியமும் கிடைக்கும் என்றும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாலில் உள்ள புரதம், கால்சியம், வைட்டமின்கள் அதிகம் மக்களுக்கு கிடைக்க வைக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று கூறியுள்ள நிறுவனங்கள். fssai அமைப்பின் அறிவிப்பால் தங்களுக்கு நல்லதே நடக்கும் என்று பால் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.