மோட்டார் வாகன காப்பீட்டில் ஸ்டார்?
மருத்துவ காப்பீட்டுத்துறையில் முத்திரை பதித்த ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தற்போது அடுத்தகட்டமாக ஆயுள் காப்பீட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மோட்டார் அல்து ஆட்டோ இன்சூரன்ஸ் துறையில் நுழைய அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. எனினும் மத்திய அரசின் ஒப்புதலை வைத்துத்தான் ஸ்டார் நிறுவனத்துக்கு பச்சை கொடி கிடைக்கும் என்பது தெரியவரும்.பொதுக்காப்பீட்டில் மோட்டார் மற்றும் மருத்துவ காப்பீடுகள் இரண்டும் மிகப்பெரிய வாய்ப்புகள் கொண்டவையாகும். ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பொதுக்காப்பீட்டில் அதிக கவனம் செலுத்தும் நிலை..கூடுதலாக சலுகைளை அறிவிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மோட்டார் காப்பீடுதான்,பெரிய வாய்ப்புகளை ஸ்டார் நிறுவனத்துக்கு ஏற்படுத்தித் தரும் என்று கூறப்படுகிறது 2024 நிதியாண்டில் காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் மட்டும் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தா வசூலித்துள்ளது. மோட்டார் இன்சூரன்ஸ் என்பது மொத்த காப்பீடுகளில் 32 விழுக்காடு அளவாக உள்ளது. கடந்த 24 நிதியாண்டில் மட்டும் பொதுக்காப்பீட்டு துறை பிரீமியம் செலுத்தும் விகிதம் மட்டும் 13 % உயர்ந்துள்ளது குறிப்படத்தக்கது.