ரிலையன்ஸ் பங்குகள் விலையேற்றம்..
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டங்கள், புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம்தனது பங்கில் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை பதிவிட்டுள்ளது. சராசரியாக 7 விழுக்காடு ரிட்டர்ன்ஸை அந்நிறுவனம் அளித்து வருகிறது. கடந்த 2013 முதல் இதே பாணியில்தான் விலையேற்றம் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் ஜிகா பேக்டரிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 முதல் பசுமை ஆற்றலில் ரிலையன்ஸ் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் கரியமில வாயு வெளியேற்றமில்லா நிறுவனமாக்க முயற்சித்து அதற்கான பணிகளை கடந்த 2021 முதல் செய்து வருகிறது. தனது குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்கள் குழுவில் வைத்துவிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் இதுவாகும். புளூம்பர்க் நிறுவனத்தின் தகவலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 %உயர்ந்து 113 பில்லியன் அமெரிக்க டாலர்களாக 2024-ல் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 20.6லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸை விட இது 4 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.