பழைய கார்களை அழித்தால் தள்ளுபடி..
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சில வணிக மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் விரைவில் புதிய சலுகைகள் அளிக்க உள்ளதாக அறிவித்தார். குறிப்பாக பழைய கார்களை அழித்துவிட்டு அதற்கான தகுதி சான்றுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த விகிதம் தள்ளுபடி அளிக்கவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம். பழைய கார்களை அழிப்பதால் சுழல் பொருளாதாரம் உருவாகும் என்றும், துாய்மையான, மற்றும் திறமையான வாகனங்கள் சாலையில் பயணிக்க முடியும் என்றும் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பழைய கார்களை அழித்துவிட்டு புதிய கார்களை வாங்குவோருக்கு 1.5 முதல் 3.5 விழுக்காடு வரை தள்ளுபடி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் சுமார் 25ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்க முன்வந்துள்ளன. இந்த புதிய சலுகைகள் குறித்து பேசியுள்ள சியாம் என்ற அமைப்பின் தலைவர் வினோத் அகர்வால், அரசு தரப்பில் இன்னும் அதிக தொகை அளிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.