பாஸ்டேகுக்கு மாற்றாக புதிய திட்டம்..?
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுங்க வரி வசூலிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கமான முறையில் இல்லாமல் Global Navigation Satellite System -GNSS என்ற திட்டத்தின் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. GNSSதிட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் தற்போது சோதனை நிலையில் உள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் கருவிகள் இனி கார்களில் பொருத்தப்படும், அதன் அடிப்படையில் சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கப்படும், வழக்கமான ஃபாஸ்ட் டேக் முறை படிப்படியாக ஒழிக்கப்படும். எவ்வளவு தூரம் பயணிக்கிறார்களோ அவ்வளவு தூரத்துக்கு மட்டும் பணம் செலுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் எத்தனை தூரம் பயணிக்கிறதோ அதற்கு மட்டும் பணம் செலுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை குறைக்கவும் முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு-மைசூரு, பானிப்பட்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த புதிய GNSS திட்டம் சோதனை செய்து பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், படிப்படியாக GNSSதிட்டம் பல்வேறு காலகட்டங்களில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது.