பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு
ஆகஸ்ட் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 711 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 25ஆயிரத்து 17புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. SBI Life Insurance, HDFC Life, Bajaj Finserv, Maruti Suzuki, Shriram Finance, உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடன் லாபம் கண்டன. JSW Steel, Titan Co, HUL, Tata Motors, Coal India.உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. Aarti Drugs, Akzo Nobel, Alkem Labs, Ashok Leyland, Bajaj Auto, Cipla, eClerx Services, Emami, Eris Life, HCLTech, HDFC Life, ICICI Lombard, Quess Corp, Sun Pharma,Suven Pharma உள்ளிட்ட பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. ஆகஸ்ட் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 695 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 93 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 500 ரூபாய் உயர்ந்து 93 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.